TNPSC Thervupettagam

மாநிலத் தேர்தல் ஆணையர் பதவி விலகல் விவகாரம்

July 12 , 2026 2 days 42 0
  • தமிழ்நாடு அரசு, மாநிலத் தேர்தல் ஆணையர் பி. ஜோதி நிர்மலாசாமியைத் தனது பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
  • பி. ஜோதி நிர்மலாசாமி 2024 மார்ச் மாதம் மாநிலத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் என்ற நிலையில் இவரது பதவிக்காலம் 2029 மே மாதம் வரை உள்ளது.
  • மாநிலத் தேர்தல் ஆணையம் என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்குப் பொறுப்பான, அரசியலமைப்புச் சார்ந்த மற்றும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பாகும்.
  • உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வார்டு எல்லை மறுவரையறைப் பணிகளை மேற் பார்வையிடும் தமிழ்நாடு எல்லை மறுவரையறை ஆணையத்தின் தலைவராகவும் அவர் உள்ளார்.
  • சில மாநகராட்சிகளின் மேயர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக இடைத் தேர்தல்களையும் அவர் மேற் பார்வையிட்டார்.
  • இந்திய அரசியலமைப்பின் 243K பிரிவின்படி, மாநிலத் தேர்தல் ஆணையர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் என்பதோடு அவர் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை நீக்கும் அதே முறையிலும் அதே காரணங்களுக்காகவும் அன்றி, பதவியிலிருந்து நீக்கப்பட மாட்டார்.
  • மேலும், மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, நியமனத்திற்குப் பிறகு மாநிலத் தேர்தல் ஆணையருக்குப் பாதகமாக அவரது பணி நிபந்தனைகள் மாற்றப்படக் கூடாது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்