மாநில இட ஒதுக்கீட்டு முடிவுகளில் மத்திய அரசின் பங்கு
February 23 , 2021 1606 days 685 0
மாநில அரசு வேலைகள் மற்றும் சேர்க்கைகளில் குறிப்பிட்ட சாதிகள் அல்லது சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த முடிவுகளில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசானது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி மற்றும் எஸ்.டி சட்டம் - 1993' (மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அல்லது அரசு வேலைகளில் வேலைவாய்ப்பு வழங்குதல்) என்ற சட்டத்தின் செல்லுபடித்தன்மையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் மீது இந்தப் பதிலை அளித்துள்ளது.
இந்த சட்டம் மாநிலத்தில் 69% இடஒதுக்கீட்டை வழங்குகிறது.
மத்திய அரசின் நிலைப்பாடு
சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளின் மாநிலப் பட்டியலில் எந்தவொரு சாதி / சமூகத்தையும் சேர்ப்பது அல்லது விலக்குவது என்பது மாநில அரசின் விருப்பமாகும், எனவே இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை.
இது 2018 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (102வது திருத்தம்) சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளுக்கான மாநிலப் பட்டியலிலும் மற்றும் மத்தியப் பட்டியலிலும் சாதிகள் மற்றும் சமூகங்களைச் சேர்ப்பது அல்லது விலக்குவதற்கான நடைமுறையில் உள்ள வேறுபாட்டை விவரிக்கிறது.
சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளை அடையாளம் கண்டு குறிப்பிடும் அதிகாரமானது மத்தியப் பட்டியலைப் பொறுத்தவரையில் அது பாராளுமன்றத்திடம் மட்டுமே உள்ளது.
2018 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (102வது திருத்தம்) சட்டத்தின் படி புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு 342ஏ என்பதின் கீழ், ஒரு மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்த பின்னர் குடியரசுத் தலைவர் அந்த மாநிலத்தில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினைச் சேர்ந்த மக்களை அறிவிப்பார்.