TNPSC Thervupettagam

மாநில எந்திரனியல் கட்டமைப்பு

May 14 , 2023 1079 days 595 0
  • தெலுங்கானா மாநில அரசானது, மாநில எந்திரனியல் கட்டமைப்பினை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இது இந்தியாவில் இது போன்ற முதல் வகையானக் கொள்கையாகும்.
  • இது ஒரு நிலையான எந்திரனியல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும், இந்தத் துறையில் மாநிலத்தினை ஒரு தலைமைத்துவம் கொண்டதாக நிலை நிறுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.
  • இது வேளாண்மை, சுகாதாரம், தொழில்துறையினை ரோபோமயமாக்கல் மற்றும் நுகர்வோர் பயன்பாடு சார்ந்த எந்திரனியல் ஆகிய நான்கு முக்கிய களங்களில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த மாநில அரசானது, முன்னதாக தொடர்ச் சங்கிலி தொழில்நுட்பம் (2018), ஆளில்லா விமானங்கள் (2019), செயற்கை நுண்ணறிவு (2020), மேகக் கணிம ஏற்பு சார்ந்த கட்டமைப்பு (2021), மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் (2022) ஆகிய முக்கிய தொழில் நுட்பப் பகுதிகளை உள்ளடக்கிய ஐந்து கட்டமைப்புகளை அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்