TNPSC Thervupettagam

மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 2026

June 18 , 2026 15 hrs 0 min 125 0
  • தமிழ்நாடு அரசு மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை (2021-22 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை) வெளியிட்டது; இதில் மாநிலத்தின் நிதி நிலை மற்றும் கடன் நிலை ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டின் மொத்த நிலுவைக் கடன் ₹13.18 லட்சம் கோடி எனவும், மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மதிப்பிடப்பட்ட கடன் சுமையாக ₹1.28 லட்சம் உள்ளதாகவும் அந்த வெள்ளை அறிக்கை தெரிவித்துள்ளது.
  • தலைப்புக் கடனான ₹10 லட்சம் கோடி என்பது சந்தைக் கடன்கள், நிறுவனக் கடன்கள் மற்றும் பொதுக் கணக்குப் பொறுப்புகள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் நேரடி கடன்களை மட்டுமே குறிக்கிறது என்று வெள்ளை அறிக்கை கூறுகிறது.
  • இதில் மாநில அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அல்லது ஆதரிக்கப்படும் பொதுத் துறை நிறுவனங்கள் (PSUs), சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் சிறப்பு நோக்க வாகனங்களின் (SPVs) கடன்கள் சேர்க்கப்படவில்லை.
  • பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களில் மிகப்பெரிய ஆதாரமாக விளங்கும் மின்சாரத் துறையின் 2.47 லட்சம் கோடி கடனில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் (TNPGCL) ஆகியவற்றின் கடன் பொறுப்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன.
  • 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) கடன் விகிதம் 28.3% ஆக இருந்தது, அதே நேரத்தில் வருவாய்ப் பற்றாக்குறை ₹78,324 கோடியை எட்டியதுடன், இது முழுமையான மதிப்பில் மிக அதிக அளவாகும்.
  • 2025-26 ஆம் ஆண்டில் வட்டி செலுத்துதலுக்கான செலவு ₹67,050 கோடியாக அமைந்தது, இது மொத்த வருவாய் வரவுகளில் சுமார் 23% ஐப் பயன்படுத்துகிறது மற்றும் இது மாநிலத்தின் ஆண்டு மூலதனச் செலவை விட கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகம் ஆகும்.
  • உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக் காட்டி உள்ள வெள்ளை அறிக்கையானது, 2031-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 18.2% முதியவர்கள் இருப்பார்கள் என்று கணித்துள்ளது.
  • மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்த வருவாய் திரட்டல், செலவின மேலாண்மை, பொதுத்துறை நிறுவன (PSU) சீர்திருத்தங்கள் மற்றும் பயனுள்ள கடன் மேலாண்மை ஆகியவற்றின் தேவையை அது வலியுறுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்