மாநில பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018 - 2030
August 30 , 2018 2456 days 2337 0
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மாநில பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018 – 2030 ஐ வெளியிட்டார்.
இத்திட்டம் பேரிடர் ஆபத்து குறைப்பிற்கான சென்டாய் கட்டமைப்பின் வரிசையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் தயாரிக்கப்பட்டது.
இதன் நோக்கம் மாநிலத்தின் வளர்ச்சி நெறிமுறைகளில் முறையான அணுகுமுறை, அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் பேரிடர் ஆபத்துகளின் முக்கியத்துவம் மூலமாக பேரிடர் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான தமிழ்நாட்டைக் கட்டமைப்பதாகும்.