மாநில வழக்குரைஞர் கழகங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு
December 12 , 2025 13 days 100 0
அனைத்து மாநில வழக்குரைஞர் கழகத் தேர்தல்களிலும் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுமாறு இந்திய வழக்குரைஞர் கழகத்திற்கு (BCI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஆண்டு, 20% இடங்கள் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் மூலம் நிரப்பப் படும் என்ற நிலையில்மேலும் 10% இடங்கள் கூட்டுத் தேர்வு (தேர்தல் இல்லாமல் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது) மூலம் நிரப்பப்படும்.
தேர்தல்கள் இன்னும் அறிவிக்கப்படாத மாநில வழக்குரைஞர் கழகங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
இந்திய வழக்குரைஞர் கழகம் கூட்டுத் தேர்விற்கான முன்மொழிவைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.
வரவிருக்கும் வழக்குரைஞர் கழக அமைப்புகளில் பெண்களின் குறைந்தபட்ச கட்டாய பிரதிநிதித்துவத்தை இந்த உத்தரவு உறுதி செய்கிறது.