குஜராத் மாநிலம் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவை மாநில ஸ்டார்ட் அப் தரவரிசை – 2019ல் சிறப்பான செயல்பாடு கொண்டவைகளாக பெயரிடப் பட்டுள்ளன.
கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் வணிகம் மற்றும் நிதியை ஈர்ப்பதற்காக வலுவான புத்தாக்கத் தொழில்முனைவுத் திறனில் முன்னிலையில் செயல்படும் மாநிலங்களாக உள்ளன.
ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், தமிழ்நாடு, அசாம், தில்லி, மத்தியப் பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை நாட்டில் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் சூழலமைப்பைக் கொண்ட மாநிலங்களாக உள்ளன.
தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது இந்தத் தரவரிசையைத் தயாரித்துள்ளது.