எகிப்தில் சுமார் 7,000 ஆண்டு காலத்திய வரலாற்றைக் கொண்ட சுமார் 100,000 கலைப் பொருட்களைக் காட்சிப்படுத்துகின்ற மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் திறக்கப் பட்டுள்ளது.
முதன்முறையாக, பார்வோன் துட்டன்காமூனின் கல்லறை அவரது தங்க முகமூடி, சிம்மாசனம் மற்றும் இரதங்கள் உட்பட முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் ஆனது கிசாவில் உள்ள குஃபுவின் பெரிய பிரமிடு அருகே அமைந்துள்ளது.
முக்கியக் காட்சிப் பொருட்களில் 3,200 ஆண்டுகள் பழமையான, 16 மீட்டர் நீளமுள்ள இரண்டாம் பார்வோன் ராமேசஸின் தூபி, அவரது 11 மீட்டர் உயர சிலை மற்றும் 4,500 ஆண்டுகள் பழமையான குஃபுவின் இறுதிச் சடங்கு படகு ஆகியவை அடங்கும்.