TNPSC Thervupettagam

மாயன் நாகரீகத்தின் வீழ்ச்சி

January 11 , 2022 1311 days 607 0
  • 9 ஆம் நூற்றாண்டில், தென்கிழக்கு மெக்சிகோவின் யுகாடன் தீபகற்பம் மற்றும் வட மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த செழுமையான மாயன் நாகரீகம் வீழ்ச்சியடைந்த நிகழ்வு அங்கு நிலவிய நீடித்த வறட்சியுடன் ஒத்துப் போவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  
  • வலுவான ஒரு வறட்சியானது உணவு கிடைக்கும் நிலையைக் குறைக்கவும், வறட்சி, இடப்பெயர்வு மற்றும் சமூகத்தின் வீழ்ச்சி போன்றவற்றை ஏற்படுத்தவும் வல்லது என்பது இதில் தெளிவாகிறது.
  • UC ரிவர்சைடு என்ற நகரிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொல் பொருள் ஆய்வாளர் ஸ்காட் ஃபெடிக் (Scott Fedick) மற்றும் தாவர அமைப்பியல் நிபுணர் லூயிஸ் சான்டியாகோ (Louis Santiago) ஆகியோர் மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வானது, மாயன் சமுதாயத்தினர் கிட்டத்தட்ட 500 வகையிலான உணவுத் தாவரங்களை அறிந்து வைத்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
  • மேலும், அவற்றில் பெரும்பாலானவை அதிகளவில் வறட்சியைத் தாங்கக் கூடியவைகும்.
  • பண்டைய மாயன் நாகரிகம் வீழ்ந்ததற்கு வறட்சி ஒரு  காரணம் என்பது குறித்து இந்த ஆய்வானது சந்தேகத்தை எழுப்புகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்