தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு அரசுப் பள்ளி, மாற்றத்திற்கான இளம் தூதர்கள் முன்னெடுப்பினைத் தொடங்கியது.
தினசரி பயிற்சி மூலம் ஒழுக்கம் மற்றும் குடிமை விழுமியங்களைக் கற்பிக்க காட்டூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளியில் இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது.
இது நேர்மை, கருணை, மரியாதை, பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் நன்றியுணர்வு போன்ற விழுமியங்களில் கவனம் செலுத்தியது.
மாணவர்கள் கதை சொல்லல், காலைக் கூட்டங்களின் போது அவற்றைப் பிரதிபலித்தல் மற்றும் பள்ளி மற்றும் வீட்டில் எளிய விழுமியம் அடிப்படையிலான செயல்கள் மூலம் கற்றுக்கொண்டனர்.
வகுப்பறைக்கு வெளியே விழுமியங்களை வலுப்படுத்தப் பெற்றோர்கள் வாட்ஸ்அப் தொடர்பு மூலம் பங்கேற்றனர்.
இந்த முன்னெடுப்பு ஆசிரியர்கள் மதிப்பெண்களை வழங்குவதற்குப் பதிலாக நடத்தை மாற்றத்தைக் கவனிக்கின்ற மதிப்பீடு சாராத அணுகுமுறையைப் பின்பற்றியது.