TNPSC Thervupettagam

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்துப் பயணம்

October 30 , 2026 14 hrs 0 min 57 0
  • தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 28 முதல், தனித்துவமான அடையாள அட்டையைப் (UDID) பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
  • 40%-க்கும் அதிகமான மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் செல்லும் ஓர் உதவியாளர், தகுதியான குளிர்சாதன வசதியற்ற அரசுப் பேருந்துகளில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
  • தகுதியான பேருந்து சேவைகளில் நகர சாதாரணப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், தாழ்தள மற்றும் சொகுசுப் பேருந்துகள், புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் இயங்கும் சாதாரண கட்டணப் பேருந்துகள் ஆகியவை அடங்கும்.
  • இதற்கான அரசாணையை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டு உள்ளது.
  • 75% பயணச் சலுகை உள்ளிட்ட தற்போதைய சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்; தகுதியான பயணிகள் பேருந்து நடத்துநர்களிடமிருந்து இலவச பயணச் சீட்டுகளைப் பெறுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்