TNPSC Thervupettagam

மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்கள் – 2026/27

February 4 , 2026 14 hrs 0 min 21 0
  • மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்பு மற்றும் உதவி ஆதரவை மேம்படுத்துவதற்காக இரண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
  • திவ்யாங்ஜன் கௌஷல் யோஜனா திட்டமானது, தகவல் தொழில்நுட்பம் (IT), AVGC (Animation, Visual Effects, Gaming and Comics), விருந்தோம்பல் மற்றும் உணவு மற்றும் பானங்கள் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட, தொழில் துறைக்குத் தொடர்புடைய பயிற்சியை வழங்கும்.
  • இந்தத் திட்டம், பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகளுக்குப் பொருத்தமான பணி சார்ந்த மற்றும் செயல்முறை அடிப்படையிலான பணிகளில் கவனம் செலுத்துகிறது.
  • திவ்யாங் சஹாரா யோஜனா திட்டமானது, தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்தர உதவி சாதனங்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியச் செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகத்திற்கு (ALIMCO) உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கப்படும்.
  • மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்தக் குடிமக்களுக்காக, பிரதம அமைச்சரின்  திவ்யாஷா கேந்திரா மையங்களை வலுப்படுத்தவும், நவீன சில்லறை விற்பனை மையங்கள் போன்ற உதவி தொழில்நுட்பச் சந்தைகளை அமைக்கவும் இந்த நிதி நிலை அறிக்கை முன்மொழிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்