மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 – சீனா
November 1 , 2023 812 days 600 0
இந்திய அணியானது 2023 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்கள் என்ற அளவிலான சிறந்தப் பதக்க எண்ணிக்கையுடன் தனது பங்கேற்பினை நிறைவு செய்ததது.
இதில் 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
இந்தியாவின் இந்த சாதனை அளவிலான பதக்க எண்ணிக்கையானது, 2018 ஆம் ஆண்டில் பெற்ற 72 பதக்கங்களை விட அதிகமாகும்.
2014 ஆம் ஆண்டில் மூன்று தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்ற இந்திய அணியின் 29 தங்கப் பதக்கங்கள் தற்போது ஒரு புதிய சாதனை எண்ணிக்கையாகும்.
ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் 111 பதக்கங்களில் 40 பதக்கங்களை வென்று, பதக்கம் வென்ற இந்திய அணியில் 37 சதவீதப் பங்கினை மகளிர் அணி கொண்டு உள்ளது.