மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025
October 9 , 2025 30 days 130 0
மாற்றுத் திறனாளிகளுக்கான 2025 ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது புது டெல்லியில் நிறைவடைந்தது.
இந்தியா முதன்முறையாக இந்தப் போட்டியை நடத்தியதோடு மேலும் இந்திய அணி 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் உட்பட 22 பதக்கங்களை இதில் வென்றது.
இந்தப் போட்டியானது, முன்னதாக 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்ட ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடைபெற்றது.
கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியினை நடத்திய நான்காவது ஆசிய நாடாக இந்தியா மாறியது.
2004 ஆம் ஆண்டில் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் 2 ஆக இருந்த இந்தியாவின் பதக்க எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 29 ஆக உயர்ந்துள்ளது.