மாற்றுத் திறனாளிகளுக்கான உலக வில்வித்தை சாம்பியன்சிப் போட்டி
March 3 , 2022 1353 days 711 0
ஐக்கிய மரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலக வில்வித்தை சாம்பியன்சிப் போட்டியின் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பூஜா ஜத்யன் பெற்றுள்ளார்.
இவர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் பத்ரில்லி வின்சென்ஷாவிடம் (Patrilli Vincenza) தோல்வியுற்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக வில்வித்தை சாம்பியன்சிப் போட்டியில் முதல் முறையாக இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.
சியாம் சுந்தர் சுவாமி மற்றும் ஜோதி பாலியன் ஆகியோர் அடங்கிய கலப்பு இணை அணியினர் ஒரு வெள்ளிப் பதக்கத்தினை வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை மேலும் வலிமைப் படுத்தி உள்ளனர்.