TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016

May 10 , 2026 6 days 90 0
  • மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (RPwD) சட்டம், 2016-இன் கீழ், 'ஆசிட்/அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள்' என்பதற்கான வரையறையை இந்திய உச்ச நீதிமன்றம் விரிவுபடுத்தியுள்ளதுடன், இதில் கட்டாயமாக ஆசிட்/அமிலம் குடிக்க வைக்கப்பட்ட சம்பவங்களில் உயிர் பிழைத்தவர்களையும் உள்ளடக்கியுள்ளது.
  • நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை முறையாகத் திருத்தும் வரை, இந்த விரிவாக்கத்தை ஒரு "கருதப்படும் சட்டத்திருத்தமாக" கருத, அரசியலமைப்பின் சரத்து 142-ஐ உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியது.
  • இந்தத் தீர்ப்பு 2016 ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வரும், இதன் மூலம் தகுதியுள்ள முன்னாள் பாதிக்கப்பட்டவர்களும் மாற்றுத்திறனாளி சலுகைகள் மற்றும் இழப்பீடுகளைப் பெற முடியும்.
  • வெளியில் தெரியக்கூடிய காயங்கள் இல்லாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளி உரிமைகள், மறுவாழ்வு, நிதியுதவி மற்றும் சட்டப் பாதுகாப்பு கிடைப்பதை இது உறுதி செய்கிறது.
  • இழப்பீட்டிற்காகக் குற்றவாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, நிரூபிக்கும் சுமையை எதிர்தரப்பிற்கு மாற்றுவது மற்றும் சட்டவிரோத ஆசிட் விற்பனையாளர்களை உடந்தையாகச் சேர்ப்பது போன்ற பரிந்துரைகளையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்