மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான இந்திய செயலி
February 13 , 2023 886 days 428 0
"எண்ணிம சூழலமைவினை மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வகையில் மாற்றுதல்" என்ற அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
வாட்ஸ்அப் (புலனம்) ஆனது, எளிதில் பயன்படுத்தக் கூடிய எண்ணிம வசதிகள் மற்றும் சேவைகள் மூலமாக மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான இந்தியச் செயலியாக விளங்குகிறது.
இணைய வர்த்தகம், இயங்கலை மூலமான பண வழங்கீட்டுச் சேவைகள், போக்குவரத்து, உணவு விநியோகம் போன்ற பல்வேறு வகைகளில் உபயோகிக்கப் படும் செயலிகளை இந்த நிறுவனம் மதிப்பீடு செய்தது.
ஃபோன்பே, பேடிஎம், ஸ்விகி, சோமாட்டோ, அமேசான், ஃபிளிப்கார்ட், டெலிகிராம், ஊபேர் மற்றும் ஓலா போன்ற பிற செயலிகளையும் இந்த ஆலோசனை வழங்கீட்டு அமைப்பானது தணிக்கை செய்துள்ளது.