மாற்று மருத்துவத்திற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் விருது
October 21 , 2022 1158 days 566 0
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வஜாஹத் ஹுசைன் பாரம்பரியம், பங்களிப்பு மற்றும் மாற்று மருத்துவத்துக்கான சர்வதேச விருதினை வென்றுள்ளார்.
சயீத் தொண்டு மற்றும் மனிதநேய அறக்கட்டளையின் இரண்டாவது ஷேக் சயீத் சர்வதேச விருதினை அவர் பெற்றுள்ளார்.
ஏற்கனவே ஹுசைனுக்கு இரண்டு முறை வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒருமுறை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை இணைந்தும் மற்றும் பின்னர் இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் வனவிலங்கு அறிவியல் துறை ஆகியவை இணைந்தும் அதனை வழங்கின.