2021 ஆம் ஆண்டில் மாலத்தீவின் அடூ நகரில் இந்தியாவின் புதிய தலைமைத் தூதரகத்தை நிறுவுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா மற்றும் மாலத்தீவுகள் ஆகியவை தொன்மைக் கால ரீதியில் இனம், மொழி, கலாச்சாரம், சமயம் மற்றும் வணிக ரீதியிலானப் பண்புகளை பகிர்ந்து கொள்கின்றன.
இந்திய அரசின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமைக் கொள்கை மற்றும் SAGAR (பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) ஆகிய குறிக்கோள்களில் மாலத்தீவுகளுக்கு முக்கிய இடம் உள்ளது.