ககன் செயற்கைக் கோளால் இயக்கப்படும் மாலுமிகளின் பயண மற்றும் தகவல் கருவியை (ஜெமினி) மத்திய புவி அறிவியல் துறை அமைச்சரான ஹர்ஷவர்தன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஜெமினி சாதனமானது பின்வருபவை குறித்த அவசரகால தகவல் மற்றும் தகவல் தொடர்புகளை தடையற்ற முறையிலும் திறம்படவும் பரப்ப இருக்கின்றது.
பேரிடர் எச்சரிக்கைகள்
சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள்
மீனவர்களுக்கு கடலின் நிலைமை குறித்த முன்னறிவிப்புகள்
மீனவர்கள் கடற் கரையிலிருந்து கடலுக்குள் 10 முதல் 12 கிலோ மீட்டருக்கு அப்பால் செல்லும் போது அவர்களுக்கு பேரழிவு எச்சரிக்கைகள் தொடர்பான தகவல்களை இது வழங்க இருக்கின்றது.
செயற்கைக்கோள்
ஜெமினி சாதனமானது ககன் செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளை புளூடூத் தகவல் தொடர்பின் மூலம் கைபேசிக்கு மாற்றுகின்றது.
ககன் (புவியிடங்காட்டியால் ஆதரிக்கப்பட்ட மிகுதிப்படுத்தப்பட்ட வழிநடத்துதல் அமைப்பு) செயற்கைக்கோள் அமைப்பானது ஜிசாட்-8, ஜிசாட் -10 மற்றும் ஜிசாட் -15 ஆகிய மூன்று தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது.
INCOIS ஆல் (இந்தியாவின் தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் - Indian National Center for Ocean Information Services) உருவாக்கப்பட்ட ஒரு கைபேசி செயலியானது தகவல்களை ஒன்பது பிராந்திய மொழிகளில் குறி விளக்கம் செய்து காட்டுகின்றது.