பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 21வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மாலுமிகள் பாதுகாப்பு முன்னெடுப்பை அறிவித்தார்.
ஆசியான்–இந்தியா கடல்சார் திட்டம் - கடலோரக் காவல் ஒத்துழைப்பு, கடல்சார் கள விழிப்புணர்வு, பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்வழி இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நீண்டகால இருதரப்பு கடல்சார் கட்டமைப்பை இந்தியா முன் மொழிந்தது.
இணையப் பாதுகாப்பு மற்றும் குற்றம் - எல்லை தாண்டிய இணையவழி மோசடி மற்றும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, இந்தியாவின் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் இணையக் குற்ற மாநாட்டை நடத்த பிரதமர் மோடி முன்மொழிந்தார்.
லோத்தலில் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் கடல்சார் பாரம்பரிய விழாவை ஏற்பாடு செய்வதற்கும், நாளந்தா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத் தலைவர்களின் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டு வலையமைப்பை நிறுவுவதற்கும் இந்தியா திட்டங்களை அறிவித்தது.
மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெற்றது.
320,000க்கும் மேற்பட்ட மாலுமிகளைக் கொண்டு, பிலிப்பைன்ஸுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய கடல்சார் தொழிலாளர் வழங்குநராக இந்தியா உள்ளது.
கிழக்கு ஆசிய உச்சிமாநாடு என்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கான முதன்மையான மன்றமாகும்.
2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இது கிழக்கு ஆசியாவின் உத்திசார், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரப் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியுள்ளது.
11 ஆசியான் உறுப்பு நாடுகளைத் தவிர, கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியக் குடியரசு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடங்கும்.