மால்கம் ஆதிசேஷையா மற்றும் எலிசபெத் ஆதிசேஷையா விருதுகள் 2026
May 7 , 2026 25 days 123 0
வளர்ச்சி ஆய்வுகளுக்கான பங்களிப்புகளுக்காக 2026 ஆம் ஆண்டிற்கான மால்கம் ஆதிசேஷையா விருது ராகவ் தாஸ் கைகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் வருகைதரு அறிஞராகவும், டெல்லி பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையின் முன்னாள் பேராசிரியராகவும் உள்ளார்.
2026 ஆம் ஆண்டிற்கான எலிசபெத் ஆதிசேஷையா விருதிற்கு கனிகா மகாஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையின் இணைப் பேராசிரியராக உள்ளார்.
வளர்ச்சி ஆய்வுகளில் சிறந்த பணிகளை மேற்கொண்ட சமூக அறிவியலாளர்களைக் கவுரவிப்பதற்காக மால்கம் மற்றும் எலிசபெத் ஆதிசேஷையா அறக்கட்டளையால் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.