வழக்கறிஞர் மன்றப் பணியிலும் நீதித் துறை சேவையிலும் ஏழு ஆண்டுகள் ஒருங்கிணைந்த அனுபவம் கொண்ட நீதித்துறை அதிகாரிகளை மாவட்ட நீதிபதிகளாக நியமிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த முடிவுக்கு இந்திய அரசியலமைப்பின் 233வது சரத்தினை அரசியலமைப்பு அமர்வு சுட்டிக் காட்டியது.
முன்னதாக, ஏழு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் மட்டுமே மாவட்ட நீதிபதிகளாக நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியுடையவர்களாக இருந்தனர்.
வழக்கறிஞர்கள் நீதித்துறை பணியில் சேர்ந்தவுடன் தங்கள் வழக்கறிஞர் அந்தஸ்தை இழக்க மாட்டார்கள் என்று நீதிமன்றம் கூறியது.
மாவட்ட நீதிபதி அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான குறைந்த பட்ச வயது 35 வயது ஆகும்.
இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு வேண்டி மாநில அரசுகள் ஆனது உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து மூன்று மாதங்களுக்குள் விதிகளைத் திருத்த வேண்டும்.