நாடு முழுவதும் உள்ள ஒன்பது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் பேச்சு, பார்வை சார்ந்த சிகிச்சை மற்றும் உளவியலாளர்களை உள்ளடக்கிய மையமாக மேம்படுத்தப் பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட மாதிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் படான், பிலிபித், பரேலி, பாலகாட், கோலாகாட், அகமதாபாத், அமராவதி, குலு மற்றும் ராம்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்கள் என்பது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு (PwDs) விரிவான சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.