டெல்லி மற்றும் காந்திநகரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாவட்ட வெள்ள தீவிர குறியீட்டை (DFSI) உருவாக்கி உள்ளனர்.
DFSI ஆனது நாட்கள் அடிப்படையிலான சராசரி வெள்ள நீடிப்பு காலம், முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய மாவட்டப் பகுதியின் சதவீதம், மொத்த உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் மாவட்ட மக்கள் தொகை ஆகியவற்றின் காரணிகளைக் கொண்டு உள்ளது.
1967 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் சேகரிக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) தரவை இந்தக் குறியீடு பயன்படுத்துகிறது.
வெள்ளப் பாதிப்பு அளவை மையமாகக் கொண்ட முந்தைய குறியீடுகளைப் போல அல்லாமல், DFSI ஆனது மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வெள்ளத்தின் தாக்கத்தை அளவிடுகிறது.
பாட்னா நகரானது, DFSI குறியீட்டில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் திருவனந்தபுரம் ஆனது மிகக் குறைவான தாக்கங்கள் காரணமாக குறைந்த பாதிப்பு தீவிரத்தைக் கொண்ட அதிக வெள்ளப் பாதிப்புகளைக் கொண்டுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை உடனே அடையாளம் காண உதவுவதன் மூலமும், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளை வழி நடத்துவதன் மூலமும் வெள்ள மேலாண்மையை மேம்படுத்துவதை இந்தக் குறியீடு நோக்கமாகக் கொண்டு உள்ளது.