TNPSC Thervupettagam

மாஸ்கோ ஒழுங்கமைவுச் சந்திப்பு

October 19 , 2021 1317 days 582 0
  • ஆப்கானிஸ்தான் குறித்த மாஸ்கோ ஒழுங்கமைவுச் சந்திப்பில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
  • இந்தச் சந்திப்பில் தாலிபன் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
  • இந்தியா இச்சந்திப்பில் இணைச் செயலாளர் என்ற நிலையில் பங்கேற்க உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காபூல் நகரம் தாலிபன்களால் கைப்பற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது மாஸ்கோ ஒழுங்கமைவுப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
  • கடந்த மாதத்தில் இடைக்கால அரசினை அமைத்த பிறகு தாலிபன்களை நேருக்கு நேராக இந்தியா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்
  • மாஸ்கோ ஒழுங்கமைவு என்பது ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு ஒரு பிராந்திய தீர்வினைக் கண்டறிவதற்கான ரஷ்ய நாட்டின் ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்