மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகச் சாதனை
January 19 , 2023 931 days 525 0
50 ஓவர் கொண்ட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியினை வீழ்த்தி இந்திய அணி சரித்திரம் ஒன்றைப் படைத்தது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று முடித்தது.
391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 22 ஓவர்களில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
முன்னதாக, 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அபர்டீனில் நடைபெற்ற அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.