மிகப்பெரிய நிலப்பரப்பு வாயு மற்றும் அழுத்தப்பட்ட உயிரி வாயு ஆலை
November 15 , 2021 1371 days 630 0
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் முதலாவது நிலப்பரப்பு வாயு மற்றும் அழுத்தப் பட்ட உயிரி வாயு ஆலையானது ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது.
ராம்கி என்விரோ லிமிடெட் என்ற நிறுவனமானது ஹைதராபாத் ஒருங்கிணைந்த மாநகராட்சி கழகத்தின் திடக்கழிவுத் தளத்தில் இந்த ஆலையினைத் திறந்துள்ளது.
இந்த ஆலையானது வாகன எரிபொருளாக நிலத்தில் குவிக்கப்பட்ட பொருட்களில் உருவாகும் வாயுவினை அழுத்தப்பட்ட ஒரு உயிரி வாயுவாக மாற்றும்.
இது கார்பன் பிடிப்பு, சுற்றுச்சூழலில் குறைவான பசுமை இல்ல வாயு வெளியீடு மற்றும் வாகன உற்பத்தித் தொழில்துறையைப் பசுமைமயமாக்கல் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.