மிகப்பெரிய 'மிதக்கும்' சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்
January 24 , 2021 1676 days 934 0
கொச்சின் சர்வதேச விமான நிலையமானது கேரள மாநிலத்தில் 452 கிலோவாட் திறன் கொண்ட, மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றை நிறுவி உள்ளது.
இது செயற்கையான இரண்டு ஏரிகளுக்கு மேல் அமைக்கப் பட்டுள்ளது.
இந்தச் செயற்கை ஏரிகளில் இருந்து வரும் நீரானது கோல்ஃப் மைதானத்தின் புல்வெளிகள் மீது நீர்ப்பாசனம் செய்ய பயன்படுத்தப் படுகிறது.
கொச்சின் விமான நிலையமானது 2015 ஆம் ஆண்டில் சூரிய சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமான நிலையமாக உருவெடுத்தது.