மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்
March 13 , 2021 1611 days 790 0
இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையமானது தெலுங்கானாவில் பெட்டபள்ளி மாவட்டத்தில் உள்ள ராமகுண்டத்தில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இது தேசிய அனல் மின் கழகத்திற்குச் சொந்தமானதாகும் (NTPC - National Thermal Power Corporation).
ராமகுண்டத்தில் உள்ள இந்த மின் ஆலையின் திறன் 100 மெகாவாட் ஆகும்.
இதைத் தவிர, இந்தக் கழகமானது கேரளாவில் உள்ள காயம்குளம் எரிவாயு ஆலையில் 92 மெகா வாட் மிதக்கும் அலகு மற்றும் விசாகப் பட்டினத்தில் சிம்ஹாத்திரி மின் ஆலையில் 25 மெகா வாட் மின் அலகு ஆகிய இரண்டையும் அமைத்துக் கொண்டு இருக்கின்றது.
NTPC
NTPC நிறுவனம் ஆனது மின்சார உற்பத்தி மற்றும் அது தொடர்பான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்தியப் பொதுத் துறை நிறுவனமாகும்.
இது நிறுவனங்கள் சட்டம், 1956 என்ற சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது இந்திய அரசினால் ஊக்குவிக்கப்படுகின்றது.
இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
இது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மின் நிறுவனமாகும்.