மிகவும் தாழ் புவி வட்ட சுற்றுப்பாதை செயற்கைக்கோள் அமைப்புகள்
March 10 , 2026 13 hrs 0 min 75 0
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மற்றும் பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மிகவும் தாழ் புவி வட்டச்சுற்றுப்பாதை செயற்கைக்கோள் (VLEO) அமைப்புகளை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
VLEO என்பது பூமிக்கு மேலே 150 கி. மீ முதல் 450 கி.மீ வரையிலான உயரத்தில் உள்ள செயற்கைக்கோள் சுற்றுப்பாதைகளைக் குறிக்கிறது.
இந்தக் கூட்டாண்மையானது பாதுகாப்பு மற்றும் குடிமைப் பயன்பாடுகளுக்கான உள் நாட்டுச் செயற்கைக்கோள் தளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
VLEO செயற்கைக்கோள்கள் வளிமண்டல இழுவிசையை எதிர்கொள்வதால், அவற்றை சுற்றுப்பாதையில் வைத்திருக்க மேம்பட்ட உந்துவிசை அமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன.
பூமிக்கு மிக அருகில் இருப்பதால், இவை சிறந்த படத்தெளிவு மற்றும் வேகமான சமிக்ஞை பரிமாற்றத்தை வழங்குகின்றன.
VLEO-வில் ஒரு செயற்கைக்கோள் செயலிழந்தால், வளிமண்டல இழுவிசை அதனை கீழே இழுத்து வளிமண்டலத்திலேயே எரித்து விடும் என்பதோடுஇது விண்வெளிக் கழிவுகளைக் குறைக்க உதவுகிறது.