மிகவும் பழமையான சுழல் பால்வளி மண்டலம் கண்டுபிடிப்பு
November 7 , 2017 2832 days 1004 0
கிட்டத்தட்ட 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, A1689B11 என்று அழைக்கப்படும் பிரபஞ்சத்தின் மிகப் பழமையான சுழல் பால்வளி மண்டலத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
13 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பிரபஞ்சத்தின் பிக் பேங்க் எனும் பிரபஞ்ச பெரு வெடிப்பு நிகழ்வு நிகழ்ந்த பின் 6 பில்லியன் வருடங்களாக இவை இருந்து வருகின்றன.
அத்தகு சமயத்தில் பிரபஞ்சத்தின் அப்போதைய வயது தற்போதைய வயதின் ஐந்தில் ஒரு பகுதியாகும்.
இது முற்கால அண்டத்தை பற்றிய நுண்ணறிவுகளை அளிக்கக் கூடிய சுழல் பால்வளி மண்டலம் ஆகும்.
விஞ்ஞானிகள் ஹவாயில் உள்ள ஜெமினி வட தொலைநோக்கியின் மீது சக்திவாய்ந்த நோக்குமுறையைப் பயன்படுத்தி பால்வளி அண்டத்தின் சுழல் தன்மையை சோதித்துள்ளார்கள்.
சுழல் பால்வளி அண்டமானது ஆரம்ப கால பிரபஞ்சத்தின் அரிதான ஒன்றாகும்.
இவை மிகக் குளிர்ந்த மற்றும் மிக மெல்லிய வட்டுகளை கொண்டு வியக்கத்தக்க வகையில் சிறிய சீற்றத்துடன் அமைதியாக சுழலும்.