பாரத் ஸ்டேட் வங்கியானது ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் எரியில் ஒரு படகு இல்லத்தில் ஒரு மிதக்கும் ஏ.டி.எம் வசதியைத் திறந்துள்ளது.
பாரத் ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ்குமார் காரா இதனைத் திறந்து வைத்தார்.
பாரத் ஸ்டேட் வங்கி இத்தகைய ஏ.டி.எம். வசதியினை தொடங்குவது இது முதன் முறையல்ல, 2004 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏற்கனவே இத்தகைய முயற்சியினை இந்த வங்கி தொடங்கியுள்ளது.
எர்ணாகுளம் மற்றும் வைப்பேயன் பகுதி இடையே இயங்கும் ஜாங்கர் யாட்ச் படகு இல்லத்தில் ஒரு மிதக்கும் ஏ.டி.எம் வசதியினை பாரத் ஸ்டேட் வங்கி அமைத்துள்ளது.