மிதிவண்டி மூலம் வேகமாக உலகைச் சுற்றிய ஆசியப் பெண்மணி
December 26 , 2018 2398 days 730 0
20 வயது நிரம்பிய புனேவைச் சேர்ந்த வேதாங்கி குல்கர்னி என்பவர் மிதிவண்டி மூலம் வேகமாக உலகைச் சுற்றி வந்த ஆசியப் பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.
இவர் 14 நாடுகளில் 159 நாட்கள் மிதிவண்டி மூலம் பயணம் செய்துள்ளார். இவர் ஒரு நாளைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்துள்ளார்.
இவர் ஜூலை மாதத்தில் பெர்த்தில் தனது பயணத்தைத் தொடங்கினார். இவர் தனது பயணத்தை நிறைவு செய்வதற்காக மீண்டும் ஆஸ்திரேலிய நகரத்திற்கு சென்றுள்ளார்.
38 வயது நிரம்பிய பிரிட்டனைச் சேர்ந்த துணிச்சல் மிகுந்த பெண்மணியாக ஜென்னி கிரஹாம் 2018 ஆம் ஆண்டில் 124 நாட்களில் வேகமாக உலகைச் சுற்றி வந்த பெண்மணியாக இருந்தார்.