சமீபத்தில் ‘மித்தாலி விரைவு இரயில்’ எனப்படும் புதிய பயணியர் இரயில் தொடங்கி வைக்கப் பட்டது.
இது இந்தியப் பகுதியில் மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைய்குரி என்ற பகுதியினையும் தாக்காவினையும் இணைக்கிறது.
இது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையே இயங்கும் மைத்ரி விரைவு இரயில் (தாக்கா – கொல்கத்தா) மற்றும் பந்தன் விரைவு இரயில் (குல்நா-கொல்கத்தா) ஆகியவற்றை அடுத்து இயக்கப் படும் மூன்றாவது பயணியர் இரயில் இதுவாகும்.
இரு நாடுகளுக்கடையே இயக்கப் படும் இந்தப் புதிய பயணியர் இரயிலானது “பங்கபந்து” ஷேக்முஜிபூர் ரஹூமானின் பிறந்த நாள் நூற்றாண்டு மற்றும் வங்க தேசத்தின் சுதந்திரப் பொன்விழா அன்று தொடங்கி வைக்கப்பட்டது.