ஒடிசா அரசானது அதன் நகர்ப்புறங்களில் 450 மின்சாரப் பேருந்துகளை இயக்கி உள்ளதுடன், மின்சாரப் பேருந்துப் பயன்பாட்டில் இந்தியாவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த மாநிலமானது, மின்சாரப் பேருந்துப் பயன்பாட்டில் மேற்கு வங்காளம் (391), ஆந்திரப் பிரதேசம் (238), சத்தீஸ்கர் (215) மற்றும் ஜார்க்கண்ட் (46) ஆகியவற்றை விஞ்சி உள்ளது.
தற்போது வரை, இந்தியா முழுவதும் 14,329 மின்சாரப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
டெல்லி (3,564), மகாராஷ்டிரா (3,296), கர்நாடகா (2,236), மற்றும் உத்தரப் பிரதேசம் (850) ஆகியவை முன்னணியில் உள்ளன.
தலைநகரப் பிராந்திய நகர்ப்புறப் போக்குவரத்து (CRUT) கழகமானது PM-eBus Sewa மற்றும் PM e-Drive போன்ற திட்டங்கள் மூலம் சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூர் உள்ளிட்ட புதிய நகரங்களுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்துகிறது.