இந்திய அரசு, 'சொந்தப் பயன்பாட்டு மின் உற்பத்தி நிலையங்கள்' (CGPs) தொடர்பான விதிகளை மாற்றியமைத்து, 'திருத்தப்பட்ட மின்சார விதிகள், 2026'-ஐ அறிவித்துள்ளது.
சொந்தப் பயன்பாட்டு மின் உற்பத்தி நிலையங்கள் (CGPs) என்பவை தொழில்துறைகள் முக்கியமாகத் தங்களின் சொந்தத் தேவைக்காக மின்சாரத்தை உற்பத்தி செய்ய அமைக்கும் மின் நிலையங்கள் ஆகும்.
இந்தத் திருத்தம், சட்ட ரீதியான தெளிவின்மையை நீக்கும் வகையில், துணை நிறுவனங்கள் மற்றும் முதன்மை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் உரிமை விதிகளைத் தெளிவுபடுத்துகிறது.
இது சொந்தப் பயன்பாட்டு நிலையை ஆண்டுதோறும் சரிபார்ப்பதை கட்டாயமாக்குவதுடன் ஏப்ரல் 1, 2026 முதல் மாநில/ஒன்றியப் பிரதேச அளவில் நியமிக்கப்பட்ட தலைமை முகமைகளை அறிமுகப்படுத்துகிறது.