மொத்தம் 7,172 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப் படுகின்ற மின்னணுவியல் கூறுகளின் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் 17 புதிய திட்டங்களுக்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதில் பல அடுக்கு PCB (மின் சுற்றுப் பலகைகள்) உற்பத்திக்கான 9 திட்டங்கள், ஒளிப் படக் கருவி தொகுதிகளுக்கான 3 திட்டங்கள், ஒளியிழை பரிமாற்றக் கருவிகளுக்கான 2 திட்டங்கள் மற்றும் இணைப்பிகள், அலையியற்றிகள் மற்றும் மூடகங்களுக்கு தலா 1 திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
இந்தியாவின் மின்னணு மதிப்புச் சங்கிலியை மேம்படுத்துவது, உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பது மற்றும் உலகளாவிய மின்னணுச் சந்தையில் ஒரு நிலையான போட்டித் தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.