மின்னணு சிகரெட்டுகளைத் தடை செய்ய மத்திய அமைச்சரவை “ஒப்புதல்” அளித்துள்ளது.
மின்னணு மூலம் உடலில் நிக்கோடினை செலுத்தும் முறையான ENDS (எலக்ட்ரானிக் நிகோடின் டெலிவரி சிஸ்டம்ஸ்/ Electronic Nicotine Delivery Systems) அல்லது மின்னணு சிகரெட்டுகள் தொடர்பான உற்பத்தி, இறக்குமதி/ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளன.
தடைக்காக அவசர வழிச் சட்ட முறையை அரசாங்கம் எடுத்துள்ளது.
பதினெட்டு மாநிலங்களும் இரண்டு யூனியன் பிரதேசங்களும் ஏற்கனவே மின்-சிகரெட்டுகள், மின்னணு ஹூக்கா மற்றும் ஆவியாக்குதல் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன.