TNPSC Thervupettagam

மின்னணு விளையாட்டுகளுக்கு அங்கீகாரம்

December 31 , 2022 898 days 386 0
  • இந்திய அரசானது மின்னணு விளையாட்டுகளை நாட்டின் முக்கிய விளையாட்டுத் துறைகளுள் ஒன்றாக ஒருங்கிணைத்துள்ளது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் "அரசியலமைப்புச் சட்டத்தின் 77வது சட்டப் பிரிவின் (3)வது உட்பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மின்னணு விளையாட்டுகளை நிர்வகிப்பதற்கான விதிமுறைகளை திருத்தி அமைத்து உள்ளார்.
  • தற்போது, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை "பல்துறை விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக மின்னணு விளையாட்டுகளை" சேர்க்க இயலும்.
  • மின்னணு விளையாட்டுகள் ஆனது 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு செயல் விளக்க அடிப்படையிலான விளையாட்டுப் போட்டியாக சேர்க்கப் பட்டது.
  • அதாவது இந்த விளையாட்டுப் போட்டிகளில் வென்ற பதக்கங்கள் ஒட்டு மொத்த அதிகாரப் பூர்வப் பதக்கப் பட்டியலில் கணக்கிடப்படவில்லை.
  • இயங்கலை விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விவகாரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தலைமை முகமையாக விளங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்