மின்னிலக்க முன்னெடுப்புகள் – குஜராத் உயர்நீதிமன்றம்
January 25 , 2022 1199 days 567 0
குஜராத் உயர்நீதிமன்றத்திற்கான இரண்டு மின்னிலக்கச் சேவைகளான “நீதிக் கடிகாரம்” மற்றும் “நீதிமன்றக் கட்டணங்களை மின்னணு முறையில் செலுத்துதல்” போன்றவை சமீபத்தில் தொடங்கப்பட்டன.
நீதிக் கடிகாரம் என்பது உயர்நீதிமன்ற வளாகத்தினுள் பொருத்தப்பட்ட ஒரு LED திரை ஆகும்.
நீதிக் கடிகாரமானது, அம்மாநில உயர்நீதிமன்றம் ஆற்றியப் பணிகளை, தெரியப் படுத்துதல் மற்றும் மிகைப்படுத்துதல் போன்றவற்றிற்காக வேண்டி குஜராத்தில் மேற் கொள்ளப்பட்ட நீதி வழங்கீட்டு முறையின் முக்கியப் புள்ளிவிவரங்களை காட்சிப் படுத்தும்.
இணையவழி நீதிமன்றக் கட்டண முறையானது, மின்னணு பணவழங்கீடு மற்றும் PDF வடிவிலான ரசீது ஆகியவற்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் நீதிமன்ற முத்திரைகளைப் பெறுவதற்கு வழக்கறிஞர் மற்றும் வழக்குத் தரப்பினர்களுக்கு வழி வகுக்கும்.