தெற்கு மத்திய இரயில்வேயானது மிக நீளமான “மின்மயமாக்கப்பட்ட இரயில்வேச் சுரங்கத்தை” இந்திய இரயில்வேயுடன் இணைத்துள்ளது.
6 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ள இந்த மின்மயமாக்கப்பட்ட இரயில்வேச் சுரங்கமானது ஆந்திரப் பிரதேசத்தின் செர்லோபல்லி மற்றும் ரப்பூரூ நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
இது புதிய ஆஸ்திரியச் சுரங்க மாதிரியின்படி (NATM - New Austrian Tunnelling Method) “குதிரை லாட” வடிவத்தில் கட்டமைக்கப்படுகின்றது.
25 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பீர்பாஞ்சல் இரயில்வேச் சுரங்கமானது இந்தியாவின் நீளமான இரயில்வேச் சுரங்கமாகும். மேலும் இது ஆசியாவின் இரண்டாவது நீளமான இரயில்வேச் சுரங்கமாகும்.