அறிவியலாளர்கள் இந்தியாவின் முதல் விரிவான மின்மினிப் பூச்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர் என்ற நிலையில் இதில் 1881-2025 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப் பதிவுகளிலிருந்து 27 பேரினங்களைச் சேர்ந்த 92 இனங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன.
இந்த இனங்களில் சுமார் 60%க்கும் அதிகமானவை இந்தியாவிற்கே உரியவை என்ற நிலையில்மேலும் பல இனங்கள் 1800களுக்குப் பிறகு மீண்டும் பதிவு செய்யப்பட வில்லை.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மிகவும் அதிகப்படியான மின்மினிப் பூச்சி பன்முகத் தன்மையைக் கொண்டுள்ளன அதைத் தொடர்ந்து வடகிழக்கு இந்தியா மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகள் உள்ளன.
மின்மினிப் பூச்சிகள் லம்பிரிடே என்ற வண்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவை மற்றும் உயிரியல் ஒளிர்வு மூலம் ஒளியை உருவாக்குகின்றன.
லூசிஃபெரின், லூசிஃபெரேஸ், ஆக்சிஜன் மற்றும் அடினோசின் ட்ரைபாஸ்பேட் (ATP) ஆகியவை உள்ளடங்கிய ஒரு வேதிவினையின் மூலம் இந்த ஒளி உருவாகிறது.
ஒளி மாசுபாடு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது இது அவற்றைப் பாதுகாப்பதன் ஒரு அவசியத்தை உணர்த்துகிறது.