2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி தனிநபர் செல்வ வள இடம்பெயர்வு அறிக்கையில், இந்த ஆண்டு உலகளவில் சுமார் 142,000 மில்லியனர்கள் அல்லது அதிக நிகர மதிப்பு உள்ள தனிநபர்களின் (HNWIs) இடம்பெயர்வைப் பதிவு செய்துள்ளது.
சுமார் 3,500 மில்லியனர்களின் நிகர வெளியேற்றத்துடன் இந்தியா உலகளவில் 57வது இடத்தில் உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 9,800 மில்லியனர்களை ஈர்த்து இதில் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து அமெரிக்கா (7,500) மற்றும் இத்தாலி (3,600) உள்ளன.
புலம்பெயர்ந்தோர், மீண்டும் வரும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காரணமாக 2,400 மில்லியனர்களைப் பெற்று சவுதி அரேபியா மிக வேகமாக வளர்ந்து வரும் இடமாக உள்ளது.
16,500 மில்லியன் டாலர் வெளியேற்றத்துடன் ஐக்கியப் பேரரசு முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து சீனா 7,800 மில்லியன் டாலர் வெளியேற்றத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
புலம்பெயர்வு இருந்த போதிலும், இந்தியாவின் மில்லியனர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் 72% அதிகரித்துள்ளது என்பதோடு இது வலுவான உள்நாட்டுச் செல்வ வள உருவாக்கத்தைக் காட்டுகிறது.