மிஹிர் ராஜேஷ் ஷா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான வழக்கு
November 11 , 2025 7 days 73 0
மிஹிர் ராஜேஷ் ஷா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம், கைதுக்கான எழுத்துப்பூர்வ காரணங்களை வழங்கத் தவறினால் அந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானதாகும் என்று கூறி தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்டவரை ஒரு நீதிபதி முன் சமர்ப்பிப்பதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே எழுத்துப்பூர்வ காரணங்களை வழங்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபருக்குப் புரியும் மொழியில் தகவல் வழங்கப்பட வேண்டும்.
இந்தத் தீர்ப்பு ஆனது முறையே தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கைதுக்கான காரணங்களைத் தெரிவிக்கும் உரிமையை உறுதி செய்கின்ற அரசியலமைப்பின் 21 மற்றும் 22(1) ஆகிய சரத்துகளை ஆதரிக்கிறது.
இந்தத் தீர்ப்பு ஆனது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) கீழ் உள்ளவை உட்பட அனைத்து குற்றங்களுக்கும் பொருந்தும்.