TNPSC Thervupettagam

மீத்தேன் எச்சரிக்கை மற்றும் பதில் அமைப்பு (MARS)

May 9 , 2026 16 hrs 0 min 20 0
  • ஐக்கிய நாடுகள் சபை (UN), மீத்தேன் எச்சரிக்கை மற்றும் பதில் அமைப்பை (MARS) நிலக்கரி மற்றும் கழிவுத் துறைகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
  • இந்தியாவின் கஞ்சூர்மார்க் குப்பை கிடங்கு, உலகின் மிகப்பெரிய மீத்தேன் வெளியேற்றும் மூன்று குப்பை கிடங்குகளில் ஒன்று என்பதை செயற்கைக்கோள் தரவுகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
  • மற்ற முக்கிய மீத்தேன் வெளியேற்றும் குப்பை கிடங்குகள் சிலியில் கண்டறியப் பட்டு உள்ளன.
  • மீத்தேன் அதிகமாக வெளியேற்றுபவர்களைக் கண்காணிப்பதற்கான உலகின் முதல் உலகளாவிய செயற்கைக்கோள் அடிப்படையிலான அமைப்பு MARS ஆகும்.
  • இந்த அமைப்பு செயற்கைக் கோள் தரவுகளை விரைவான மீத்தேன் குறைப்பு மற்றும் பதில் முயற்சிகளுடன் இணைக்கிறது.
  • MARS அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) சர்வதேச மீத்தேன் உமிழ்வு கண்காணிப்பகத்தின் (IMEO) கீழ் செயல்படுகிறது.
  • இந்த அமைப்பு 27-வது தரப்பு நாடுகளின் மாநாட்டின் (COP27) போது அறிவிக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்