மீயொலி வேக (மிக வேகமாக இயங்கும்) ஆயுதங்களை வைத்திருத்தல்
December 28 , 2019 2064 days 873 0
மிக வேகமாக இயங்கும் ஆயுதங்களை வைத்திருக்கும் உலகில் உள்ள ஒரே நாடு ரஷ்யா மட்டுமேயாகும்.
ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடின் மாஸ்கோவில் நடத்தப்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் புதிய சிர்கான் ஏவுகணையை அறிமுகப் படுத்தினார்.
சிர்கான் ஏவுகணையானது ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகமாக, நிலத்திலிருந்து நிலத்தை நோக்கிப் பறக்கும் திறன் கொண்டது. இது 2,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்ட இலக்க வரம்பை (1,250 மைல்) கொண்டுள்ளது.
இது அணு ஆயுதங்கள் அல்லது வழக்கமான போர் ஆயுதங்களை சுமந்து கொண்டு பறக்கும் திறன் கொண்டது.
சமீபத்தில் சீனா தனது மீயொலி வேக விமானத்தை சோதனை செய்தது.