முகநூல் நிறுவனத்தின் தொழில் முனையும் பெண்களுக்கான திட்டம்
August 13 , 2017 3055 days 1303 0
ஓடிஸா
முகநூல் (Facebook) நிறுவனத்தின் “She Means Business” எனும் தொழில் முனையும் பெண்களுக்கானத் திட்டம் ஒடிசா மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இதனை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் துவங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டிற்குள் 2500 பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் (Digital Marketing) குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வாறு பயிற்சி அளிக்கப்படும் பெண்கள் குறித்த தரவுகளை முகநூல் நிறுவனம் தயாரிக்கும். மேலும் ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு அவர்களின் நிறுவனம், தொழில் விகிதம், நிகர இலாபம் போன்றவை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்யும்.