முக நூல் வழங்கக் கூடிய டிஜிட்டல் கல்வியறிவுப் பயிற்சி
February 15 , 2020 2010 days 611 0
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 1 லட்சம் பெண்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவுப் பயிற்சி அளிக்க முக நூல் “வீ திங்க் டிஜிட்டல்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தேசிய மகளிர் ஆணையம் மற்றும் இணையவழி அமைதி அறக்கட்டளை ஆகியவற்றினால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சித் திட்டமானது பெண்கள் திறன் மேம்பாடு அடைவதையும், பெண்களுக்கு இணையம் மூலம் பொருளாதார வாய்ப்புகள், கல்வி மற்றும் சமூக இணைப்பிற்கு சமமான அணுகலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக நூலின் உலகளாவிய டிஜிட்டல் கல்வியறிவுத் திட்டமான “வி திங்க் டிஜிட்டல்” ஆனது 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தெற்காசியப் பாதுகாப்பு உச்சி மாநாட்டின் இரண்டாவது பதிப்பின் போது அறிவிக்கப்பட்டது.