வங்கி அல்லாத கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு முகவர் சேவையை வழங்குவதற்கான மசோதாவானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் அளித்து, சுமூகமான மூலதனச் சுழற்சியையும் நல்லமுறையான பணப் புழக்கத்தினையும் உறுதி செய்வதில் அந்த நிறுவனங்களுக்கு உதவும்.
தற்போதுள்ள முகவர் ஒழுங்குமுறைச் சட்டமானது 2011 ஆம் ஆண்டில் இயற்றப் பட்டது.
இது ஒரு வங்கி அல்லாத நிதியியல் நிறுவனமானது முகவர் வணிகத்தினை ஒரு முதன்மை வணிகமாகக் கொண்டிருந்தால் மட்டுமே இந்த வேலையைத் தொடர்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளித்துள்ளது.
அதாவது அந்த நிறுவனத்தின் பாதிக்கும் மேலான சொத்துகள் பயன்படுத்தப்பட்டு முகவர் வணிகத்தின் மூலம் வருவாய் ஈட்டப்பட வேண்டும்.